"மேகதாது அணையை கட்ட விட மாட்டோம்" - அமைச்சர் துரைமுருகன்

x

கர்நாடக அரசு மேகதாது அணையை கட்ட ஒருபோதும் விட மாட்டோம் என, அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, மேகதாது அணை விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, கர்நாடகாவில் நண்பர்கள் இருந்தாலும், எதிரிகள் இருந்தாலும், மேகதாது அணையை கட்ட விடமாட்டோம் என்பதில் உறுதியாக இருப்போம் என துரைமுருகன் பதிலளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்