"தேடி வந்தது என்னமோ கள்ளச்சாராயம்... ஆனால் கிடைத்தது நாட்டுத் துப்பாக்கி.." - சிக்கிய வியாபாரி

x

கேரளாவின் பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி அரளிக்கோணம் பகுதியில் வீட்டில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக ராஜேந்திரன் என்பவரை கலால் துறையினர் கைது செய்தனர். வீட்டில் கள்ளச்சாராயம் வைத்திருப்பதாக, ராஜேந்திரன் வீட்டிற்கு கலால்துறையினர் சோதனைக்குச் சென்றுள்ளனர். ஆனால், வீட்டில் கள்ளச்சாராயம் எதுவும் கிடைக்கவில்லை. இருந்தும், வீட்டிற்கு வந்தவர்களை வெறும் கையுடன் அனுப்ப மனமில்லாமல், வந்தவர்களிடம் நாட்டுத் துப்பாக்கியுடன் வசமாக சிக்கியுள்ளார் ராஜேந்திரன். பின்னர், நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்து ராஜேந்திரனை, கலால்துறையினர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்