'நாங்க குடிச்சே ஆகணும்...' மின் கம்பி திருடி, ஜெயில் கம்பி எண்ணும் இருவர்..!

x

ஈரோடு மாவட்டம நாகர்பாளையம் பகுதியில் அலுமினியம் மின் கம்பிகளை திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மின் பாதை பராமரிப்பு பணிக்காக, நாகர்பாளையம் பகுதியில், மின் ஊழியர்கள் அலுமினிய மின் கம்பிகளை வைத்து இருந்தனர்.

இந்நிலையில், மது அருந்துவதற்காக ரகுநாதன் மற்றும் நாகராஜ் என்ற இருவர் கம்பிகளை திருடியுள்ளனர்.

ஆனால், இருவரையும் கையும் களவுமாக பிடித்த மின்வாரிய அதிகாரிகள், கோபி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதை தொடர்ந்து இருவர் மீதும் வழக்குபதிந்த போலீசார் சிறை​யில் அடைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்