"நாங்கள் இறந்துடுவோம்-னு நினைச்சோம்... பஸ் கிடைக்க 11 லட்சம் கொடுத்தோம்" - சூடானில் இருந்து திரும்பிய இந்தியர்கள் உருக்கம்

x

சூடானில் சிக்கி இருந்த இந்தியர்களில், முதற்கட்டமாக 360 பேர் நேற்றிரவு டெல்லி வந்தடைந்தனர்.

சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக ஆபரேஷன் காவிரி திட்டத்தை மத்திய அரசு செல்படுத்தி வருகிறது. அந்த திட்டத்தின்கீழ், முதல் கட்டமாக 360 இந்தியர்கள், சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் இருந்து விமானம் மூலம் நேற்றிவு டெல்லி வந்தடைந்தனர். அவர்களில் ஒன்பது பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். அவர்களை தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் வரவேற்று, சொந்த ஊர் செல்வதற்காக 5 பேரை சென்னைக்கும், 4 பேரை மதுரைக்கும் விமானத்தில் அனுப்பி வைத்தனர். முன்னதாக, சூடானில் இருந்து திரும்பி வந்தவர்கள், இந்திய ராணுவம் வாழ்க, பிரதமர் மோடி வாழ்க என்ற முழக்கமிட்டபடியே விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்