"2002-ல் கலவரக்காரர்களுக்கு பாடம் கற்பித்தோம்" - காங். கட்சியை கடுமையாக விமர்சித்த அமித்ஷா

x

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மகுதாவில் பிரசாரம் செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார். காங்கிரஸ் மாநிலத்தில் வன்முறையை தூண்டி வாக்கு வங்கி அரசியலை செய்தது என குற்றம் சாட்டினார். குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது மத கலவரம் தொடர்ந்து என்றவர், நடந்ததா...? நடக்கவில்லை என கூட்டத்தை நோக்கி கேள்வியை எழுப்பினார். 2002 ஆம் ஆண்டு பிரதமர் மோடி நடவடிக்கையை மேற்கொண்ட, கலவரக்காரர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்கப்பட்டது, இப்போது வரையில் அவர்களது கையை உயர்த்த தைரியம் எழவில்லை என அமித்ஷா கூறினார். குஜராத்தில் இருந்து கலவரக்காரர்கள் வெளியேற்றப்பட்டனர் எனவும் மாநிலத்தில் அமைதியை கொண்டுவந்ததாகவும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்