"ஏழ்மையற்ற புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும்" - குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

x

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது.

ஏழ்மையை அகற்றுவோம் என்பது வெறும் முழக்கமாக அல்லாமல் செயல்படுத்தப்படுவதாக குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு அமைப்பிலும் நேர்மைக்கு மதிப்பளிக்கப்படுவதை உறுதி செய்துள்ளதாக தெரிவித்த அவர், ஊழல் என்பது மக்களுக்கு எதிரானது என்றார்.

பணிகளில் பெண்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் இருக்கக் கூடாது என்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளதாகவும், பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்குவதே அரசின் முக்கிய நோக்கம் என்றும் திரவுபதி முர்மு தெரிவித்தார்.

9 ஆண்டுகளில் இந்தியா மீதான உலக நாடுகளில் பார்வை மாறியுள்ளதாக கூறிய முர்மு, தீவிரவாதத்திற்கு எதிராக மத்திய அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதாக பாராட்டினார்.

பொருளாதார வளர்ச்சியில் 5வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளதாகவும், தேசத்தை கட்டமைக்கும் கடமையுடன் மத்திய அரசு அயராது பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்

ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 11 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், பிரதமரின் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தை முன்னெடுத்து செல்ல அரசு முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்