"நாம் ஒன்றாக வேண்டும், கழகம் வென்றாக வேண்டும்" - ஒரே போஸ்டரில் ஓபிஎஸ், ச‌சிகலா, டிடிவி

x

ச‌சிகலா, டிடிவி தினகரனின் படங்களுடன் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மதுரையில் பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். திருப்பரங்குன்றம், திருமங்கலம் பகுதி முழுவதும் "நாம் ஒன்றாக வேண்டும், கழகம் வென்றாக வேண்டும்" என்ற வசனத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சில தினங்களுக்கு முன்பு டிடிவி தினகரனை சந்தித்து பேசிய ஓபிஎஸ், இதுவரை ச‌சிகலாவை சந்தித்து பேசவில்லை. அதற்கு முன்பே அவரது படத்தையும் பயன்படுத்தி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியிருப்பது, அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்