"வாக்கு வங்கி பாதித்தாலும் பரவாயில்லை என PFI அமைப்பை தடை செய்தோம்" -மத்திய அமைச்சர் அமித் ஷா கருத்து

x

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் கர்நாடகாவில் பிரசாரம் செய்த அமித்ஷா, பி.எப்.ஐ. விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். தேச விரோத சக்திகளை திருப்திப்படுத்தும் காங்கிரசால் கர்நாடகத்தை பாதுகாக்க முடியாது எனற அமித்ஷா பேச்சுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பை தெரிவித்தது. இந்த நிலையில் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் விளக்கம் அளித்திருக்கும் அமித்ஷா, பிஎப்ஐ பயங்கரவாதத்தை ஊக்குவித்ததால் அதனை தடை விதித்தோம் என்றார். பி.எப்.ஐ. அமைப்பினருக்கு எதிராக இருந்த வழக்குகளை எல்லாம் காங்கிரஸ் அரசு மூட முயற்சித்தது, அதனை நீதிமன்றங்கள்தான் தடை செய்தது எனக் குறிப்பிட்டார். வாக்கு வங்கிய அரசியலை தாண்டி பி.எப்.ஐ. அமைப்புக்கு தடை விதித்தோம் எனக் கூறிய அமிஷ்தா, தொடர்ந்து தேசிய நலன் நடவடிக்கையில் எந்த தாமதம் இருக்காது என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்