"4 கி.மீ தூரம் நடக்கிறோம்..படிக்க முடியல..” கோரிக்கை வைத்த பள்ளி மாணவர்கள்
ராமநாதபுரம் அருகே பேருந்து வசதி செய்து தரக்கோரி, பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். உத்தரகோசமங்கை மேல்நிலை பள்ளியில், கே. கொடிக்குளம், புத்தேந்தல், வெண்குளம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்கள், பள்ளிக்குச் செல்ல 4 கிலோமீட்டர் வரை நடந்து செல்ல வேண்டி இருப்பதாகக் கூறி, பேருந்து வசதி ஏற்பாடு செய்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
Next Story
