"ரெண்டு ட்ரைலரும் பாத்தாச்சு.. எதுக்கு போகணும் முடிவு பண்ணியாச்சு".. வாரிசு trailer fans reaction

x

விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படம் வரும் 11-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 'வாரிசு' திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று மாலை வெளியான நிலையில், 'வாரிசு' திரைப்படம் வரும் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுபோல, அஜித்குமாரின் துணிவு திரைப்படம் வரும் 11ம் தேதி வெளியாகிறது. பொங்கல் திருநாளையொட்டி ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக, 11ம் தேதி அன்று துணிவு வெளியாகும் என அந்த படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்

2014ம் ஆண்டு பொங்கலையொட்டி அஜித்தின் வீரம், விஜயின் ஜில்லா படங்கள் வெளியாகின. அதன் பிறகு, இந்த பொங்கல் திருநாளில், பல ஆண்டுகளுக்கு பிறகு அஜித் குமார் படமும் விஜய் படமும் ஒரே நாளில் வெளியாவதால் இரு தரப்பு ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்...Next Story

மேலும் செய்திகள்