"அட..! இது நல்ல ஆஃபரா இருக்கே.." - மனைவி துணி எடுத்தா, கணவனுக்கு வாஷிங் மெஷின் ஃபிரீ... இணையத்தை கலக்கும் அறிவிப்பு

x

அவிநாசியில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாவை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தீபாவளி பண்டிகையை ஒட்டி, 999 ரூபாய்க்கு மனைவிக்கு துணி எடுத்தால், கணவருக்கு துவைக்கிற மெஷின் இலவசம் என, நடிகர் வடிவேலு புகைப்படத்துடன் கூடிய விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளது.

இது, பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

தீபாவளி பண்டிகையில் இருந்து பொங்கல் வரை 999 ரூபாய்க்கு துணி எடுக்கும் நபர்களின் பெயர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு 10 பேருக்கு வாஷிங் மெஷின் பரிசாக வழங்கப்படும்.


Next Story

மேலும் செய்திகள்