மெஸ்ஸி அசாமில் பிறந்தாரா? - பரபரப்பை கிளப்பிய ட்விட் | Messi | Assam | Fifa World Cup 2022

x

பிரபல கால்பந்து வீரரான மெஸ்ஸி அசாம் மாநிலத்தில் பிறந்ததாக காங்கிரஸ் கட்சி எம்பி ஒருவர் கூறியது பேசு பொருளாகியுள்ளது. உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை வென்று அர்ஜென்டீனா அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அர்ஜென்டீனா கால்பந்து வீரர் மெஸ்ஸிக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். இதனிடையே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் அப்துல் காலிக் என்பவர், ட்விட்டரில் மெஸ்ஸிக்கு தனது வாழ்த்தை தெரிவித்தார். அதில் மெஸ்ஸி அசாம் மாநிலத்தில் பிறந்ததாக அவர் கூறியது, பலராலும் ட்ரோல் செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் அந்தப் பதிவை நீக்கினார்.


Next Story

மேலும் செய்திகள்