உலக நாடுகளின் போர் கப்பல்கள் ஒரே இடத்தில் - பொறியாளரின் அசர வைக்கும் திறன்

3 நாடுகளில் கப்பல் கட்டும் தளங்களில் பாதுகாப்பு பொறியாளராக பணியாற்றிய சசிதரன், உலக நாடுகளின் போர் கப்பல்களை மினியேச்சராக உருவாக்கி அசத்தியுள்ளார். கேரள மாநிலம் திருவல்லா கடப்பாரா பகுதியை சேர்ந்த சசிதரன், இந்தியா உட்பட 3 நாடுகளில் கப்பல் கட்டும் தளங்களில் பாதுகாப்பு பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், ஓய்வில் இருக்கும் அவர், சிறிய அளவிலான போர்கப்பல்களை நேர்த்தியாக அழகுடன் வடிவமைத்துள்ளார். அந்த சிறிய போர்க்கப்பல்கள் மூலம் கப்பல் கட்டும் திறனை டிப்ளமோ படிக்கும் மாணவர்களுக்கு சசிதரன் விளக்கினார்.

X

Thanthi TV
www.thanthitv.com