நள்ளிரவில் நடுக்கடலில் மூழ்கிய போர்க்கப்பல்.. கிளம்பிய 37 கிமீ தூரத்தில் நிகழ்ந்த கோரம் - 106 பேரின் கதி என்ன?

x

தாய்லாந்தில் போர் கப்பல் கடலில் மூழ்கிய விபத்தில் காணாமல் போன 33 பேரை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

தாய்லாந்தின் ராணுவத்திற்கு சொந்தமான போர்க்கப்பல், நேற்று நள்ளிரவு விபத்துக்குள்ளானது.

பாங்காங்கிற்கு அருகே உள்ள கடற்கரையில் இருந்து 37 கிலோ மீட்டர் தூரத்தில் பயணித்து கொண்டிருந்தபோது, திடீரென ஒரு பக்கமாக சரிந்து அந்த கப்பல் மூழ்க தொடங்கியது.

இந்த போர்க்கப்பலில் சுமார் 106 பேர் பயணித்த நிலையில், இரவோடு இரவாக நடந்த தீவிர தேடுதல் பணியின் மூலம் இதுவரை 73 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஆனால் எஞ்சிய 33 பேரின் நிலை என்ன ஆனது என்பது தெரியவில்லை.

காணாமல் போனவர்களை தேடும் பணியில் தாய்லாந்து ராணுவம் ஈடுபட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்