புதினுக்கு பிடிவாரணட் பிறப்பிப்பு... - உக்ரைனில் போர் குற்றம் செய்ததாக வழக்கு

x

ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினை கைது செய்ய, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரணட் பிறப்பித்துள்ளது.

கிழக்கு உக்ரைன் பகுதிகளை கைப்பற்றியுள்ள ரஷ்யா, அங்குள்ள சிறுவர், சிறுமியர்கள் பலரையும் பலவந்தமாக ரஷ்யாவிற்கு இடம் மாற்றியுள்ளது. இது போர்க்குற்றம் என்ற அடிப்படையில் ரஷ்ய அதிபர் புதின் மற்றும் ரஷ்யாவின் குழந்தைகள் நல ஆணையர் மரியா லோவோ ஆகியோர் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. நெதர்லாந்தின் ஹாக் நகரில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பினராக உள்ள 123 நாடுகளுக்கு, புதின் பயணம் சென்றால், அவரை அந்நாடுகள் கைது செய்ய வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

ஆனால் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் இதில் உறுப்பினராக சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பல சமயங்களில் உறுப்பினர் நாடுகள் இத்தகைய பிடிவாரண்டுகளை செயல்படுத்த மறுத்துள்ளன. ஆனாலும், பல்வேறு உலக நாடுகளுக்கு புதின் பயணம் மேற்கொள்வதில் சிக்கல்

ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்