உலகை அச்சுறுத்தும் எச்சரிக்கை செய்தி... மிரட்டும் XBB.1.5 உருமாறிய வைரஸ் - கொரோனவை விட ஆபத்தா?

உலகை அச்சுறுத்தும் எச்சரிக்கை செய்தி... மிரட்டும் XBB.1.5 உருமாறிய வைரஸ் - கொரோனவை விட ஆபத்தா?
x

இந்தியாவில் 11 மாநிலங்களில் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ள XBB.1.5 உருமாறிய கொரோனா வைரஸ் குறித்த எச்சரிக்கை தகவலை அலசுகிறது இந்த தொகுப்பு.....

2019-ல் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் இன்று வரையில் உருவத்தை மாற்றி, தனது வேலையை காட்டிக்கொண்டே இருக்கிறது.

அந்தவகையில் இப்போது XBB.1.5 உருமாறிய வைரஸ் உலகை மிரட்ட தொடங்கியிருக்கிறது. இது ஏற்கனவே உருமாற்றம் கண்ட ஒமிக்ரானின் இரண்டு வெவ்வேறான பிஏ. 2 துணைப் பிரிவுகளின் இனக்கலப்பு வைரஸ் ஆகும். இதன் பரவல் வேகம் அதிகமாக உள்ளது என அமெரிக்க விஞ்ஞானி எரிக் டோபோல் தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் உலகம் முழுவதும் 38 நாடுகளில் பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் மொத்த பாதிப்பில் 82 சதவீதமும், பிரிட்டனில் மொத்த பாதிப்பில் 8 சதவீதமும் XBB.1.5 உருமாறிய வைரசால் ஏற்பட்டது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 11 மாநிலங்களில் XBB.1.5 வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை வரையில் 26 பேருக்கு XBB.1.5 உருமாறிய வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள மற்ற வகை வைரஸ்களைவிடவும் XBB.1.5 வைரஸ் 12.5 சதவீதம் வேகமாக பரவுகிறது என ஐரோப்பிய யூனியனின் நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. வைரஸ் குறித்து ஆய்வு செய்திருக்கும் நியூயார்க் சுகாதாரத்துறையும், இதே தகவலை தெரிவித்துள்ளது. XBB.1.5 உருமாறிய வைரஸ் தடுப்பூசி செலுத்தியவர்களையும், கொரோனாவால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர்களையும் தாக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் XBB.1.5 வைரஸ் இன்னும் கடுமையான நோயை ஏற்படுத்துமா என்பது தெரியவில்லை என நியூயார்க் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது மற்றும் மரணத்தில் தற்காத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்தாதவர்கள் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும், தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்கள் பூஸ்டர் டோஸ்களை செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.








Next Story

மேலும் செய்திகள்