"பசியிலிருந்து தப்பிக்க வேறுவழி தெரியவில்லை" - தூக்கணாங்குருவிகள் மீது போர் தொடுத்துள்ள தேசம்!

பசியிலிருந்து தப்பிக்க வேறுவழி தெரியவில்லை - தூக்கணாங்குருவிகள் மீது போர் தொடுத்துள்ள தேசம்!
x

தூக்கணாங்குருவிகள் மீது ஒரு தேசமே போர் தொடுத்து வருவது தான் தற்போது இணையத்தில் பெரும் பேசு பொருளாகியிருக்கிறது. அது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.....

நம்மூர் சிட்டுக்குருவியை விட அளவில் சிறியதான ஆப்பிரிக்க தூக்கணாங்குருவிகளை லட்சக்கணக்கில் ஒரு தேசம் கொன்று குவித்து வருதும்... அதற்காக பயன்படுத்தி வரும் பூச்சிக்கொல்லி மருந்தும் ஐநாவின் எச்சரிக்கைக்கு ஆளாகியுள்ளது.

நம் நாட்டில் எப்படி வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் விவசாயிகள் கதி கலங்கி போவார்களோ... அதேபோல் தான் ஆப்பிரிக்கா விவசாயிகளை கதற வைத்து வருகிறது...

இந்த ஆப்பிரிக்க தூக்கணாங்குருவிகள்.

பசி... பஞ்சம்... பட்டினி... என்று விழிபிதுங்கி நிற்கும் ஆப்பிரிக்க மக்களை... மேலும் நோகடித்துள்ளது , இந்த பறவையினம்.

ஆப்பிரிக்கா வரைபடத்தில் கொம்பு போன்ற அமைப்புடன் காட்சியளிக்கும் இடத்தை ஆப்ரிக்காவின் கொம்பு என்று அழைக்கிறார்கள். இந்த கொம்பு பகுதியில் அமைந்துள்ள சோமாலியா, எரித்ரியா, எத்தியோப்பியா, ஜிபூட்டி, கென்யா, உகாண்டா, சூடான் ஆகிய நாடுகள் பல ஆண்டுகளாக வறட்சியின் கோரப் பிடியிலிருந்து தப்ப முடியாமல் தவித்து வருகின்றன.

ஏற்கனவே இந்த பகுதியில் புல்வெளிகள் எல்லாம் காணாமல் போய் வரும் நிலையில், எஞ்சி இருக்கும் விவசாய நிலங் களின் மூலம் தங்கள் வயிற்றுப் பசியை தீர்க்க மக்கள் போராட வேண்டியுள்ளது.

ஆனால் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு போல் ஒரே நேரத் தில் லட்சக்கணக்கில் படையெடுக்கும் இந்த ஆப்பிரிக்க தூக்கணாங்குருவிகள் சுமார் 300 ஏக்கர் நெற்பயிர்களை அழித்துவிட்டன. இரண்டு லட்சம் ஆப்பிரிக்க தூக்கணாங் குருவிகளால் நாள் ஒன்றுக்கு 50 டன் நெற்பயிர்களை சேதப் படுத்த முடியுமாம்.

அதோடு, இந்த பறவையினம் தான் உலகிலேயே அதிகளவில் வாழும் பறவையினமாகவும் அறியப்படுகிறது. ஆப்பிரிக்கா வில் மட்டும் சிவப்பு அலகுகளை கொண்ட இந்த கியூலியா பறவையினத்தில் சுமார் 150 கோடி அளவில் இருப்பது... விவசாயிகளுக்கு கூடுதல் தலைவலியை கொடுத்து வருகிறது.

தற்போது இந்த பறவையினத்தை வயலில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதன் மூலம் கொன்று குவித்து வருகின்றனர், கென்யா விவசாயிகள். தற்போது வரை சுமார் 60 லட்சம் ஆப்பிரிக்க தூக்கணாங்குருவிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக ஃபெந்தியான் (fenthion) என்ற பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் இந்த பூச்சிக்கொல்லியை பயன்படுத்தசுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த பூச்சிக்கொல்லியில் உள்ள ரசாயனம் மனிதர்களுக்கே ஆபத்தை விளைவிக்க கூடியது என்பது தான் அவர்கள் விடுக்கும் எச்சரிக்கை.

இப்படி நித்தமும் தங்களின் பசியை போக்க போராடி வரும் கென்யா மக்கள்... தற்போது பறவையினத்துடன் போர் தொடுத் திருக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்