ஆளுநர் ஆர்.என்.ரவிக்காக வெயிட்டிங்... காத்திருக்கும் 13 மசோதாக்கள்... தமிழக சட்டத் துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

x

தமிழக ஆளுநர் வசம் 13 மசோதாகள் நிலுவையில் உள்ளதாக தமிழக சட்டத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.


தகவல் அறியும் சட்டத்தின் கீழ், தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்கள் நிலை குறித்து தமிழக சட்டத் துறையிடம் தரவுகள் பெறப்பட்டு, வெளியிடப்பட்டுள் ளது.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான முந்தைய அதிமுக ஆட்சியில் நிறைவேறப்பட்ட இரண்டு மசோதாக்கள் உட்பட 13 மசோதாக்கல் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

2020 ஜனவரியில், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் மற்றும் கால்நடை பல்கலைக்கழகங்களில் ஆய்வு நடத்தவும், விசாரணை செய்வதற்கும் தமிழக அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இரு சட்டத் திருத்த மசோதக்கள் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டு, நிலுவை யில் உள்ளன.

தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டத் திருத்த மசோதா 2022,

சென்னை பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா 2022,

டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா 2022 ,

டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா 2022,

தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா 2022,

தமிழ் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா 2022,

தமிழக பல்கலைக்கழகங்கள் இரண்டாவது சட்டத் திருத்த மசோதா 2022,

தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா 2022,

தமிழ்நாடு மீன் வளப் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா 2023,

தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா 2023,

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சிறப்பு திட்டங்களுக்கான சட்ட மசோதா 2023 ஆகியவை ஆளுநரிடம் நிலுவையில் உள்ளன.

தமிழக பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகராத்தை ஆளுநரிடம் இருந்து தமிழக அரசுக்கு மாற்ற இவை வகை செய்கின்றன.

2022ல் 48 மசோதாக்களும், 2023ல் இதுவரை 21 மசோதாக்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்