"அக்குளில் ஓட்கா, வினிகர்..."-"துணியை துவைக்காமல் இருப்பதே நல்லது" -அழுக்கு ஜீன்ஸ் - அசிங்கம் இல்லை!

x

இன்றைய இளைஞர்களிடம், உங்களுக்கு மிக கடினமாக வேலையென்று எதை சொல்வீர்கள் என்று கேட்டால், உடனே வரும் பதில் துணி துவைப்பது என்பதாகத்தான் இருக்கும்... படிப்பு, வேலை, தொழில் நிமித்தமாக ஊரு விட்டு ஊரு சென்று தங்கியிருக்கும் இளைஞர்கள், தங்களுக்கு கிடைக்கும் ஒரு நாள் விடுப்பை துணி துவைப்பதில் செலவிட விரும்புவதில்லை.... இதை உறுதிப்படுத்தும் விதமாக துணி துவைப்பதில் நாட்டமில்லாத வர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கின்றது. துணியை துவைக்காமல் இருப்பதே நல்லது என்கிறது no wash clup என்னும் குழு. இதற்கு ஒரு படி மேலே போய், 'இண்டிகோ இன்விடேஷனல்' என்னும் போட்டியை நடத்துகிறது மேற்கத்திய நாடுகள்.

இந்த போட்டியின் விதி முறையே "நீங்கள் ஆண்டுமுழுவதும் ஒரே jeans pant ஐ பயன்படுத்த வேண்டும்...! ஆனாலும்,அது புதியது போலவே இருக்க வேண்டும். இந்த போட்டியில் நீங்கள் வெற்றி பெற உங்கள் jeans pant ஐ துவைக்கவே கூடாது... அப்படி இருந்தால்தான் உங்கள் வெற்றி சாத்தியம். jeans pant ஐ அதிகபட்சம் 5 நாட்கள் துவைக்காமல் பயன்படுத்தலாம், அதெப்படி ஓராண்டாக துவைக்காமல் இருக்க முடியும்..? என நீங்கள் கேள்வி கேட்கலாம்... அதெல்லாம் முடியும் என்கிறார்கள் அனுபவஸ்தர்கள்...! உங்கள் jeans pant உட்பட எதுவாகினும், அதை துவைக்காமல், நல்ல சூரிய வெளிச்சத்தில் காய வைக்கும் போது, அதில் உள்ள புற ஊதா கதிர்கள் துணியில் உள்ள கிருமிகளை கொள்ளும்.... இவ்வாறு செய்தால் உங்களுக்கு துவைக்கும் நேரமும் மிச்சம். சூழல் பாதிப்பும் குறையும் என்கின்றனர்.துணி துவைக்க ஆர்வமில்லாமல் இருப்பவர்களை, மையமாக வைத்துதான், Wool & Prince என்ற நிறுவனம் தங்கள் துணிகளை நூறு நாள் வரை துவைக்காமல் பயன்படுத்தலாம் என கடையை விரித்தது. அந்த அந்நிறுவன தயாரிப்புகளுக்கு இளைஞர்களிடம் மவுசு கூடியது... இது ஒருபுறமிருக்க, உங்கள் அக்குள்களில் வினிகர் மற்றும் வோட்காவை அடித்துக் கொண்டு துணிகளை பயன்படுத்து வதன் மூலமாகவும், இரவில் துணியை காற்றில் உளர போடுவதன் மூலமாகவும் நாற்றத்தை தவிர்க்க முடியும் என்கின்றனர்.

துணிகளை சுத்தமாக பயன்படுத்தவில்லையென்றால் எக்ஸிமா என்ற தோல் வியாதி ஏற்பட வாய்ப்புண்டு, அதற்காக ஒவ்வொரு முறையும் உங்கள் துணிகளை துவைக்க தேவையில்லை...துணி அழுக்காகவோ, நாற்றத்துடனோ இருந்தால் வெட்க்கப்பட வேண்டிய அவசியமும் இல்லையென்கிறார் யுனிவெர்சிட்டி ஆஃப் லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆடை வடிவமைப்பு பேராசியராக இருக்கும் மார்க் சம்னர்... குளிர்நாடுகளுக்கு no wash clup கூறும் விஷயங்கள் பொருந்தும் என்றாலும், இந்தியா போன்ற தட்பவெப்பம் கொண்ட நாடுகளுக்கு ஒத்துவருமா என்பது கேள்வி குறிதான்.


Next Story

மேலும் செய்திகள்