டிரம்ப்பை அலறவிடும் இளம் இந்திய வம்சாவளி.. அல்லோலப்படும் அமெரிக்க அரசியல்..!

x
  • அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடக்க இருக்கும் அதிபர் தேர்தலுக்கு தற்போதே அமெரிக்காவில் தேர்தல் ஜூரம் பரவ ஆரம்பித்துவிட்டது.
  • பல நாடுகளை போலவே அமெரிக்காவிலும் பலம் வாய்ந்த இரு கட்சிகளான ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சிகளுக்கு இடையே தான் போட்டி என்றாலும்... அதிபர் தேர்தலுக்கு முன்பு நடத்தப்படும் வேட்பாளருக்கான தேர்தல் களம் தற்போதே அங்கு சூடுபிடித்துவிட்டது.
  • அதுவும் இம்முறை நடக்கும் அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து களத்தில் குதித்திருப்பது... அமெரிக்க அதிபர் தேர்தலை நமக்கும் இன்னும் சுவாரஸ்யமானதாக்கியிருக்கிறது.
  • சென்ற முறை போல் இம்முறையும் மீண்டும் முன்னாள் அதிபர் டிரம்ப் மற்றும் அதிபர் பைடன் தங்களின் கட்சிகள் சார்பில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். இதில் தேர்தல் பிரச்சாரத்தில் முந்தி கொண்ட டிரம்ப்பிற்கு எதிராக தான் தற்போது இரண்டு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் களமிறங்கியிருக்கிறார்கள்.
  • பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்ட பெற்றோருக்கு பிறந்த குடியரசு கட்சியை சேர்ந்தவரும்... தெற்கு கரோலினா மாகாணத்தை சேர்ந்தவருமான 51 வயதான நிக்கி ஹேலே...டிரம்ப்பிற்கு எதிராக வேட்பாளர் தேர்வில் களமிறங்கியுள்ளார்.
  • இந்நிலையில், தற்போது மற்றொரு இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான விவேக் ராமசாமியும் அதிபர் வேட்பாளருக்கான தேர்தல் களத்தில் குதித்துள்ளார்.
  • தற்போது 37 வயதான விவேக் ராமசாமி... திருமணமானவர்... அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் கேரளாவை பூர்வீகமாக கொண்ட பெற்றோருக்கு பிறந்தவர்.
  • ஹார்வேடு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான விவேக் ராமசாமி.. உயிரியல் பட்டப்படிப்பும்.. உயர்படிப்பும் முடித்துள்ளார்... அதோடு, சட்ட டிப்பு படித்தவரும் கூட.
  • தற்போது சொத்து மேலாண்மை மற்றும் மருத்துவத்துறையில் தொழில்நுட்பம் தொடர்பான நிறுவனங்களை நடத்தி வரும் இவர்... அமெரிக்காவின் மிக பெரிய கோடீஸ்வரர்களுள் ஒருவராக அடையாளம் காணப்படுகிறார். அதோடு பொருளாதாரம் தொடர்பாக புத்தகங்களும் எழுதி வருகிறார்.
  • 2016 ஆம் ஆண்டு மிக பெரிய தொழிலதிபராக இருந்து அதிபர் தேர்தலில் களமிறங்கிய டிரம்ப்பை அமெரிக்க மக்கள் அதிபராக தேர்ந்தெடுத்திருந்தனர்... அந்த வரிசையில், பெரும்பாலான டிரம்ப்பின் கொள்கைகளுடன் ஒத்து போக்கக்கூடிய நபராக வலம் வரும் விவேக் இம்முறை தனது அதிபர் கனவை எட்டிப்பிடிக்க வேட்பாளராக களம் காணுகிறார்.
  • அதோடு... குடியரசு கட்சி சார்பில் தொலைக்காட்சியில் அரங்கேறிய பல விவாத மேடைகளில் கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைத்து... மக்களிடம் மேலும் பிரபலமடைந்தவர்... விவேக் ராமசாமி.
  • அதே வேலையில், கருப்பின மக்களின் போராட்டத்தை விமர்சித்து கூறிய கருத்துக்களால் எதிர்ப்புகளையும் சம்பாதித்தவர்.
  • அமெரிக்க எல்லை பாதுகாப்பு தொடர்பாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கடுமையாக விமர்சித்து வந்த விவேக்... அமெரிக்காவில் குடியேறுவது முதல் எல்லாவற்றிலும் தகுதியின் அடிப்படையில் முடிவுகளும்... வாய்ப்புகளும் தீர்மானிக்கப்பட வேண்டும் என்ற கொள்கை கொண்டவராக வலம் வருகிறார். மேலும், டிரம்ப்பை போல் இவரும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கருத்துக்கு எதிரானவர்.
  • இதனால் டிரம்ப்பிற்கும் விவேக் ராமசாமிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இதுவரை அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்கிய
  • இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களின் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளார், விவேக் ராமசாமி

Next Story

மேலும் செய்திகள்