திடீரென மயங்கிய கார் டிரைவர்.. வேகமாக இடித்து தூக்கி வீசிய கார் - வெளியான கோர வீடியோ

x

ஆந்திராவில் மாநிலம் விசாகப்பட்டினத்தில், காரை ஓட்டிய நபர் திடீரென மயங்கியதால், சாலையோரம் நின்றவர்களை கார் முட்டி தூக்கி வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உதய் என்பவர் காரை ஓட்டிக் கொண்டு சென்ற போது திடீரென மயங்கினார். இதனால், கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்தவர்களை இடித்து தள்ளியது. இதில், இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவரும், நடந்து சென்றவரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்