கலெக்டர் ஆபீஸை ஏலம் விடுவதாக நோட்டீஸ்... நீதிமன்ற ஊழியர்கள் அதிரடி - விருதுநகரில் பரபரப்பு

x
  • விருதுநகரில் நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரருக்கு இழப்பீடு வழங்கப்படாததால், வரும் 31-ஆம் தேதி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஏலம் விடுவதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
  • நெடுஞ்சாலைப் பணி தொடர்பான வழக்கில் சபரிமுத்து என்ற ஒப்பந்ததாரருக்கு 68 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
  • ஆனால் அந்த தொகையை வழங்காததால், அவருக்கு 2 கோடியே 35 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குமாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிள்ளது.
  • அவருக்கு தற்போது வரை இழப்பீடு வழங்காததால், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஏலம் விடுவதாக நீதிமன்றம் ஊழியர்கள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்