திடீரென ரயிலில் இருந்து இறங்கி.. கற்களை எடுத்து வீசிய நபர்.. சிதறிய கண்ணாடி.. பரபரப்பு சம்பவம்
திடீரென ரயிலில் இருந்து இறங்கி.. கற்களை எடுத்து வீசிய நபர்.. சிதறிய கண்ணாடி.. பரபரப்பு சம்பவம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில், ரயில் பயணிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற முத்துநகர் விரைவு ரயிலில், பயணிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. பின்னர், மதுராந்தகம் ரயில் நிலையத்துக்கு வந்த போது, கீழே இறங்கிய பயணி ஒருவர், ரயில் பெட்டிகள் மீது கற்கள் வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், இரண்டு கண்ணாடிகள் உடைந்ததால், பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
