விராட் கோலி அடித்த 74 -வது சதம்... தீவிர ரசிகர் செய்த சிறப்பான சம்பவம்

விராட் கோலி அடித்த 74 -வது சதம்... தீவிர ரசிகர் செய்த சிறப்பான சம்பவம்
Published on

விராட் கோலி 71வது சதமடித்தால் மட்டுமே தான் திருமணம் செய்துகொள்வேன் எனக் கூறியிருந்த ரசிகர், கோலி 74வது சதமடித்த அதே நாளில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அமன் அகர்வால் என்ற கோலி ரசிகர், சில ஆண்டுகளுக்கு முன்பு, கோலி 71வது சதம் அடித்தால்தான் தான் திருமணம் செய்துகொள்வேன் என்ற பதாகையுடன் மைதானத்திற்கு வந்திருந்தார். ஆனால் சுமார் ஆயிரம் நாட்களுக்குப் பிறகு கடந்த ஆண்டுதான் கோலி தனது 71வது சதத்தை அடித்திருந்தார். சமீபத்தில் இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் கோலி அடித்த சதம், சர்வதேசப் போட்டிகளில் அவரது 74வது சதமாக அமைந்தது. இந்நிலையில், ரசிகர் அமன் அகர்வால் கோலி 74வது சதமடித்த அன்று திருமணம் செய்துகொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், தான் 71வது சதம்தான் கேட்டேன் என்றும், ஆனால் கோலி 74வது சதத்தையே ருசித்துவிட்டார் என்றும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com