நூறாவது டி20 போட்டியில் களமிறங்கும் விராட் கோலி

x

நூறாவது டி20 போட்டியில் களமிறங்கும் விராட் கோலி


இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தனது நூறாவது டி-20 போட்டியில் இன்று களமிறங்க உள்ளார். ஆசிய கோப்பை தொடரில், இன்றைய பாகிஸ்தானுக்கு எதிரான டி-20 போட்டியே, விராட் கோலியின் சர்வதேச நூறாவது டி-20 போட்டியாகும். இதுமட்டுமல்லாமல், இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 என மூன்று விதமான போட்டிகளிலும், நூறு ஆட்டங்களில் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும், விராட் கோலி படைக்க உள்ளார். விராட் கோலி இதுவரை 102 டெஸ்ட் போட்டிகளிலும், 262 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்