சாலையை ஆய்வு செய்த பாரதிய சமாஜ் எம்.எல்.ஏ... தரம் மோசமாக இருந்ததால் காலணிகளால் ஜல்லிக்கற்களை பிடுங்கிய வைரல் வீடியோ

x

உத்தரப்பிரதேச மாநிலம் காஜிபூரில், சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்ய சென்ற பாரதிய சமாஜ் எம்.எல்.ஏ., தனது காலணிகளால் ஜல்லிக்கற்களை வேரோடு பிடுங்கிய காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காஜிபூர் மாவட்டம், ஜகானியா பகுதியில் அமைக்கப்பட்ட சாலையை, பாரதிய சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. பேடி ராம் சுஹேல்தேவ் ஆய்வு செய்தார். சாலையின் தரம் மிகவும் மோசமாக இருந்ததால் ஆத்திரமடைந்த அவர், சாலையின் ஜல்லிக்கற்களை வேரோடு பிடுங்கி எறிந்தார்.


Next Story

மேலும் செய்திகள்