"சட்டம் ஒழுங்கை யார் மீறினாலும் முதல்வர் நடவடிக்கை எடுப்பார்" - அமைச்சர் அன்பில் மகேஸ்

x

சட்டம் ஒழுங்கை மீறுபவர்கள் எந்த கட்சி சேர்ந்தவராக இருந்தாலும் முதலமைச்சர் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவார் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் 8 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட அருங்காட்சியகத்தை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

பின்னர் அங்கிருந்த கைத்தறி காட்சியறை, பறவைகள் பூங்கா போன்றவற்றை பார்வையிட்டார்.

அப்போது, அமைச்சர் கையில் கிளிகள் அமர்ந்ததும், தீனி கொடுத்து மகிழ்ந்தார்.

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு இபிஎஸ் அணி ஆதரவு என்ற செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஒரே கட்சி ஒரு அணியாக வரட்டும் பேசுகிறேன் என்று அன்பில் மகேஸ் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்