ஹோலி பண்டிகையின்போது பெண் சுற்றுலா பயணியிடம் அத்துமீறல்.... சிறுவன் உட்பட 3 பேர் கைது

x

டெல்லியின் பஹார் கஞ்ச் பகுதியில் நடைபெற்ற ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின்போது, வண்ணப்பொடிகளை பூசுவது போல், ஜப்பானை சேர்ந்த பெண் சுற்றுலா பயணியிடம் சிலர் அத்துமீறினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தானாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், பெண் சுற்றுலா பயணியிடம் அத்துமீறிய சிறுவன் உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர். 3 பேரும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ள போலீசார், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளதாகவும் கூறியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தால், அதன்படியும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்