பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு வினேஷ் போகட் சவால்

x

இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை அவர் மறுத்து வந்த நிலையில், உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டுமென, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்கள் சவால் விடுத்தனர். இந்நிலையில், சோதனைக்கு தான் தயாராக இருப்பதாகவும், வினேஷ் போகட் உட்பட தன் மீது குற்றம் சாட்டியவர்களையும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும், பிரிஜ் பூஷன் நிபந்தனை விதித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வினேஷ் போகட், தான் மட்டும் அல்ல, புகார் அளித்த அனைத்து பெண் வீராங்கனைகளும் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாராக இருப்பதாகவும், அதனை நேரலையில் நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, மல்யுத்த வீரர்களும் நார்கோ சோதனைக்கு ஒப்புக்கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டம், நாளை ஒரு மாதத்தை எட்டுகிறது. பிரிஜ் பூஷன் கைது செய்யப்படாததை கண்டித்து இந்தியா கேட் பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்