"குட்டி விநாயகர் சோ கியூட்.." - கும்பாபிஷேகத்தில் தனது டான்ஸால் கவர்ந்த சிறுவன் - சுவாரஸ்ய வீடியோ

x

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள செல்வ சுந்தர விநாயகர் கோவில் மற்றும் ஓடக்கரை செல்வ விநாயகர் கோயில்களில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

3 நாட்கள் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் நாள்தோறும் பல்வேறு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது.

இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சபாநாயகர் அப்பாவுக்கு, பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

விழாவின் சிறப்பாக கோவையை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் ட்ரோன் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில், திரளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்