22 உயிர்கள் போயும் அடங்காத வெறி.. உயிரை துச்சமென நினைத்த இருவர் - தமிழகத்தை மீண்டும் அதிரவைத்த 'வீடியோ'

x

கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த விவகாரத்தில், போலீசார் கடும் நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழலில், அதே விழுப்புரத்தில் 2 பேர் பட்டப்பகலில் பொது இடத்தில் கள்ளச்சாராயம் குடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது... இதுகுறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...

கடந்த சில நாட்களுக்கு முன்பு, தமிழகத்தை உலுக்கிய சம்பவம் இது... விழுப்புரம், செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த விவகாரம், தமிழக சட்டப்பேரவை வரை எதிரொலித்தது...


விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில், கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களில் 59 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் 52 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 7 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு தரப்பில் இழப்பீடு அறிவிக்கப்பட்ட நிலையில், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


கள்ளச்சாராயம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக போலீசார் கூறியுள்ள நிலையில், அதே விழுப்புரத்தில் போதை ஆசாமிகள் இருவர், ஹாயாக பொது இடத்தில் உட்கார்ந்து கள்ளச்சாராயம் குடிக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


விழுப்புரம் ரயில் சந்திப்பு நிலையத்தில், பட்டப்பகலில் போதை ஆசாமிகள் இருவர் கள்ளச்சாராயம் குடித்துக் கொண்டிருந்தது, அங்கிருந்தவர்களை முகம் சுழிக்க வைத்தது. 22 பேரின் உயிர் போன பின்பும், உயிர்மேல் எந்தவொரு அச்சமும் இல்லாமலும், போலீசாரை சற்றும் பொருட்படுத்தாமலும், போதை ஆசாமிகளின் இந்த செயல், விழுப்புரத்தில் இன்னும் கள்ளச்சாராயம் கொடி கட்டிப் பறப்பதாகவே பொதுமக்கள் கூறுகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்