கோயிலுக்குள் நுழைந்த பட்டியலின மக்கள் தீக்குளிக்க முயன்ற கிராம மக்கள் - அதிர்ச்சி காட்சிகள்

x

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்களில் சிலர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது. மேல்பாதி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான திரெளபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. கடந்த ஏப்ரல் 7ம் தேதி நடைப்பெற்ற தீமிதி திருவிழாவின் போது, அக்கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள் கோயிலுக்குள் நுழைய முயன்றதாக கூறப்படுகிறது. இதனிடையே, பட்டியலின மக்கள் கோயிலுக்குள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் குடும்ப அட்டைகளை ஒப்படைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதோடு, மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது...


Next Story

மேலும் செய்திகள்