"தாய்மாமன் சீர் சுமந்து வாராண்டி..." | ஊரே வியந்த சீர் வரிசை..! | மேளதாளத்துடன் அசரவைத்த தாய்மாமன்..

x

"தாய்மாமன் சீர் சுமந்து வாராண்டி..." | ஊரே வியந்த சீர் வரிசை..! | மேளதாளத்துடன் அசரவைத்த தாய்மாமன்..


வண்ணம்பட்டியைச் சேர்ந்த முனீஸ்வரன், ஹேமலதா தம்பதியினரின் மகள் ப்ரதீக்க்ஷாவிற்கு காதணி விழா நடைபெற்றது. அதில், தமிழர்களின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் குழந்தையின் தாய்மாமன் பாலாஜி சீர்வரிசை கொண்டு வந்தார். கிழக்குச் சீமையிலே சினிமா பட பாடலில் வருவது போல, பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் தேங்காய், பழம், அரிசி, பருப்பு உள்ளிட்டவைகளை உறவினர்கள் தலையில் வைத்துக் கொண்டு , ஊரே ஆச்சரியப்படும் வகையில் ஊர்வலமாக கொண்டுவந்தனர். மேலும், தமிழரின் பாரம்பரியமான ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டத்துடன் விழா களை கட்டியது.


Next Story

மேலும் செய்திகள்