ஒத்தையாக பவுலர்களை பந்தாடிய ஜெகதீசன்...மிரளவிட்ட தமிழக கிரிக்கெட் அணி - புதிய உலக சாதனை | Cricket

x

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தமிழக அணி 506 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்து உள்ளது. அருணாசலப் பிரதேசத்துக்கு எதிரான போட்டியில் 50 ஓவர்களில் தமிழக அணி 2 விக்கெட் இழப்புக்கு 506 ரன்கள் குவித்தது. பெங்களூருவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழக அணியின் தொடக்க வீரர் ஜெகதீசன் 277 ரன்களும், சாய் சுதர்சன் 154 ரன்களும் எடுத்தனர். இதன்மூலம், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் எடுத்த அணி என தமிழக கிரிக்கெட் அணி புதிய சாதனை படைத்து உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்