"எப்பவுமே இங்க தான் ஃபர்ஸ்ட் நடக்கும்.. எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு" - வேதனைப்பட்ட விஜயபாஸ்கர்

x

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்காதது வருத்தமளிக்கிறது என, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் நடைபெறுவதாக இருந்த நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவர செய்யவில்லை எனக்கூறி, மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுக்கப்பட்டது. இதனிடையே, ஜல்லிக்கட்டில் பங்கேற்க வந்த ஒருவர், தனது காளையை ஜல்லிக்கட்டு திடலில் அவிழ்த்து விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, தச்சங்குறிச்சிக்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், விழா கமிட்டியினர், பொதுமக்களிடம் ஆலோசனை நடத்தினார்


Next Story

மேலும் செய்திகள்