வசந்தகுமார் குறித்த யாரும் அறியா ரகசியம் உடைத்த மகன் விஜய் வசந்த்

தமது தந்தை ஹெச்.வசந்த குமார், காமராஜர் பற்றிய தாலாட்டுப் பாடல்களைப் பாடி, தூங்க வைப்பார் என்று கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் நெகிழ்ச்சியுடன் கூறினார். காமராஜர் பிறந்த தினத்தை ஒட்டி, கேரள மாநிலம், பாறசாலையில் புனரமைக்கப்பட்ட காமராஜர் சிலைக்கு, கேரள காங்கிரஸ் கட்சியினருடன் விஜய் வசந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவர் பேசும்போது, காமராஜரின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் என்றும், அவருடைய பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com