விஜய் சேதுபதியின் 50வது பட அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு...

x

விஜய் சேதுபதியின் 50வது படம் சார்ந்த தகவல் இன்று வெளியாகிறது. குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து, தென்மேற்கு பருவகாற்று மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் விஜய் சேதுபதி, 50வது படமாக குரங்கு பொம்மை பட இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் நடிக்கிறார். படத்தின் தலைப்பு மற்றும் முதல் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ள படக்குழு, விஜய் சேதுபதி இதுவரை நடித்த கதாபாத்திரங்களை வைத்து சிறப்பு வீடியோவை பகிர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்