அபாயம்... இது தமிழ்நாடா? வடநாடா? வருங்காலம் வடமாநிலத்தவருக்கா?.. விஜய்சேதுபதி ரசிகர்களால் பரபரப்பு

x

இது தமிழ்நாடா வடநாடா என்ற கேள்வியுடன் மதுரையில் நடிகர் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

சில தினங்களுக்கு முன்பு ரயிலில் வட மாநில மக்கள் ஏராளமானோர் சென்னைக்கு வந்த வீடியோ வேகமாக பரவிய நிலையில், திருப்பூரில் தமிழக இளைஞர்கள் மீது வடமாநிலத்தவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் சர்ச்சையை கிளப்பியது.

இந்த சூழலில், வருங்காலம் வடமாநிலத்தவருக்கா என்ற கேள்வியுடன் விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தினர் பெயரில் மதுரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில் வடமாநிலத்தவர்களை புறக்கணியுங்கள் என்று இடம்பெற்ற வாசகம் பேசுபொருளாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்