விஜய் ரசிகர்களால் நெல்லையில் பரபரப்பு..!

x

நெல்லை மாநகரில், பல்வேறு பகுதிகளில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 121வது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடும் வகையில், நெல்லை மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் அவர்கள் ஒட்டியுள்ள போஸ்டரில், 2026ல் தமிழகத்தின் தேடலே.., நாளைய தலைமுறையை வழிநடத்தப்போகும் நாளைய முதல்வரே... என நடிகர் விஜய்யை குறிப்பிட்டு இடம்பெற்றுள்ள வசனங்கள் பேசு பொருளாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்