விபத்தில் சிக்கிய நடிகர் விஜய் ஆண்டனி காயத்தில் இருந்து குணமடைந்து வருவதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் லங்காவி தீவில் நடைபெற்ற பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்தின் படபிடிப்பின் போது விஜய் ஆண்டனி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் ஆபத்தான கட்டத்தை கடந்துவிட்டதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாக குறிப்பிட்டுள்ள தயாரிப்பாளர் தனஞ்செயன், அவருடன் குடும்பத்தாரின் முடிவை பொறுத்து சென்னை அழைத்து வரப்படுவார் என தெரிவித்துள்ளார்