பட்டாக்கத்தி மூலம் பிறந்தநாள் கேக்கை வெட்டிய ரவுடி - அண்ணன் மகனை மடியில் வைத்து வீடியோ

காரைக்குடியில் பட்டாக்கத்தியை குழந்தையின் கையில் கொடுத்து, பிறந்தநாள் கேக்கை வெட்ட வைத்த ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சத்யாநகரை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, கஞ்சா விற்பனை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், அண்ணன் மகன் பிறந்தநாள் விழாவில், அஜித்குமார் தனது மடியில் குழந்தையை அமரவைத்து, பட்டாக்கத்தி மூலம் பிறந்தநாள் கேக்கை வெட்ட வைத்தார். இந்த வீடியோ வெளியாகி சமூகவலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், அஜித்குமாரை காரைக்குடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

X

Thanthi TV
www.thanthitv.com