சூப்பர் மார்கெட்டில் பொருட்களை திருடி சட்டைக்குள் மறைக்கும் வீடியோ காட்சிகள் வெளியீடு

x

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் உள்ள சூப்பர் மார்கெட்டில், நபர் ஒருவர் பொருட்களை திருடி தனது சட்டைக்குள் மறைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. கேசவனேரி சந்திப்பில் உள்ள அந்த சூப்பர் மார்கெட்டில் பொருட்களை வாங்குவது போல் வந்த நபர், ஆள் இல்லாத நேரத்தில் விலை உயர்ந்த பொருட்களை சட்டைக்குள் மறைத்து திருடி சென்றார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிவான நிலையில், அது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்