வெற்றிமாறனின் படப்பிடிப்பில் கோர விபத்து.. ரோப் கயிறு அறுந்து ஸ்டண்ட் மாஸ்டர் பலி

x

சென்னை ஒட்டியுள்ள தாம்பரம் அருகே ஊனமாஞ்சேரி பகுதியில், 'விடுதலை' என்ற படத்தின் படப்ப்பிடிப்பு சில நாட்களாக நடைபெற்று வருகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் தயாராகும் இந்த படத்திற்கு, சண்டை பயிற்சி நடைபெற்றது.

ட்ரெயின் மூலம் செல்வது போல் கட்சிகள் படம் பிடிக்கப்பட்ட போது, திடீரென்று கிரேன் அறுந்து விழுந்தது.

இதில், 30 அடி உயரத்தில் இருந்து, 59 வயதான சண்டை பயிற்சியாளர் சுரேஷ் கீழே விழுந்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த சுரேஷை, படப்பிடிப்பில் இருந்தவர்கள் மீட்டு, கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே சுரேஷ் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதனால், படப்பிடிப்பில் பங்கேற்றவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. தகவலறிந்து, சண்டை பயிற்சியாளர் சுரேஷின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை சூழ்ந்தனர்.

இதையடுத்து, சுரேஷின் உடலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, தயாரிப்பாளர் சொந்த இடத்தில் படப்பிடிப்பு நடந்த‌தால், காவல்துறையின் அனுமதி வாங்கவில்லை என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்