நேருக்கு நேர் மோதிய அரசு பஸ் - லாரி; 70 பயணிகளின் நிலை என்ன?
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில், நான்கு பேர் காயமடைந்தனர்.
சுண்டகிரி அருகே, சூளகிரியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மீது, எதிரே வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பேருந்தில் பயணம் செய்த நான்கு பேர் காயமடைந்தனர். மேலும், பேருந்தில் பயணித்த 70 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த விபத்து காரணமாக சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Next Story
