"இப்போ ஜட்ஜ் இங்க வரணும்".. சுவர் மீது ஏறி சிறுவன் போராட்டம்.. உடனே வந்த நீதிபதி.. வேலூரில் பரபரப்பு

• வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் கட்டிட சுவரின் மீது ஏறி, கீழே இறங்காமல் 3 மணி நேரம் சிறார் ஒருவர் போக்குகாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. • இளம் சிறாரை சென்னை பாதுகாப்பு இல்லத்திற்கு அதிகாரிகள் மாற்ற முயற்சி செய்தனர். • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிறார் ஒருவர் பாதுகாப்பு இல்ல கட்டிட சுவர் மீது ஏறி நின்று, கீழே இறங்காமல் அதிகாரிகளுக்கு போக்கு காட்டினார். • நீதிபதி சம்பவ இடத்துக்கு வர வேண்டும் கோரிக்கை வைத்தார். • பின்னர்,வேலூர் இளஞ்சிரார் நீதிமன்ற குழும நீதிபதி பத்மகுமாரி பாதுகாப்பு இல்லத்திற்கு நேரில் வந்து இளஞ்சிறாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். • பிறகு கீழே இறங்கி வந்த சிறாரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார்.
X

Thanthi TV
www.thanthitv.com