"திடீர் விசிட்" அடித்த ஆட்சியர் | நோயாளி புகார்..! பதறிய ஊழியர்..! | நடந்தது என்ன..?

x

குடியாத்தம் அரசு மருத்துவமனை அண்மையில்

மாவட்ட தலைமை மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டது. அங்கு ஏராளமான

நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

நோயாளிகளிடம் மருத்துவமனை செயல்பாடு மற்றும் குறைகள் குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார். அனைத்து வார்டுகளிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார் . அப்போது, உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட ஒருவர், மருத்துவமனை ஊழியர் தன்னிடம் 200 ரூபாய் கேட்டதாக ஆட்சியரிடம் புகார் தெரிவித்தார். அருகில் இருந்த மருத்துவமனை ஊழியர் பதறி போய் தான் சத்தியமாக பணம் கேட்கவில்லை என கூறினார். அவரை எச்சரித்த ஆட்சியர், நோயாளிகளிடம் ஊழியர்கள் பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்