வேலூர் சிஎம்சி ராகிங் விவகாரம் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி ராகிங் விவகாரம் குறித்து, 2 வாரங்களில் அறிக்கை அளிக்க கல்லூரி நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவர்களை அரை நிர்வாணபடுத்தி, இறுதி ஆண்டு மாணவர்கள் ராகிங் செய்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ராகிங் செய்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கல்லூரி நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டியது யார் பொறுப்பு? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ராகிங் செய்த மாணவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவ கல்லூரி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு, விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்