ஓணம் பண்டிகையால் உயர்ந்த காய்கறி விலை

ஓணம் பண்டிகையால் உயர்ந்த காய்கறி விலை

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைவாலும், ஓணம் பண்டிகையை ஒட்டியும் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது

மழை மற்றும் வரத்து குறைவால் கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இயல்பாக 1,200 டன் தக்காளி வரும் நிலையில், தற்போது தொடர் மழையால், 500 டன் தக்காளி மட்டுமே வரத்து வருகிறது.

இதனால் இன்று நாட்டு தக்காளி 50 ரூபாய்க்கும், பெங்களூரு தக்காளி 60 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது.

அதேபோல் உதகையில் பெய்து வரும் கடும் மழையால் கேரட் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று கிலோ கேரட் 90 ரூபாய்க்கும் சில்லறை விற்பனை கடைகளில் 100 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

தொடர்ந்து கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதன் காரணமாக பெரும்பாலான காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com