சோதனை மேல் சோதனை... யானைகளால் 'வாரிசு'-க்கு வந்துள்ள புதிய சிக்கல்... பொங்கலுக்கு ரீலிஸ் ஆகுமா..?

x

படப்பிடிப்பு தளத்தில் உரிய அனுமதியின்றி யானைகளை பயன்படுத்தியதாக கூறி, வாரிசு பட குழுவினருக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை அருகில் உள்ள தனியார் பொழுதுபோக்கு படப்பிடிப்பு தளத்தில் நடந்து வரும் வாரிசு படப்பிடிப்பின் போது உரிய அனுமதியின்றி யானைகளை அழைத்து வந்து பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக படபிடிப்பு தளத்திற்கு நேரில் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம் யானையை வாகனத்தில் அழைத்து வர பெறப்பட்ட அனுமதி கடிதம் மட்டும் காட்டப்பட்டதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பில் யானையை பயன்படுத்தவதற்கான அனுமதி கடிதத்தை

அவர்கள் சமர்பிக்காததால் இந்த விவகாரம் சர்ச்சையானது. இதற்கிடையே, யானையை பூஜைக்கு பயன்படுத்த மட்டுமே அழைத்து

வந்ததாகவும், இதுதொடர்பான உரிய ஆவணங்களை விரைவில் சமர்ப்பிப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க படகுழுவிற்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது


Next Story

மேலும் செய்திகள்