"நேர்மையாக வேலை செய்ய முடியல" பணியை துச்சமென உதறி தள்ளிய VAO - தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்தார்..!

"நேர்மையாக வேலை செய்ய முடியல" பணியை துச்சமென உதறி தள்ளிய VAO - தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்தார்..!
Published on

தனது பணியை நேர்மையாக செய்ய முடியவில்லை என அருப்புக்கோட்டை கிராம நிர்வாக அதிகாரி, விரக்தியில் ராஜினாமா செய்துள்ள சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கள்ளக்காரி என்ற கிராமத்தில், விஏஓ-வாக பணிபுரிந்து வருபவர் பிரித்திவிராஜ். சமூக சேவகரான இவர், கடந்த 2019ம் ஆண்டு கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றி கிராம நிர்வாக அதிகாரி என பட்டம் பெற்றவர். இந்த நிலையில், விஏஓ பணியை தொடர முடியவில்லை என, தனது மேல் அதிகாரியிடம் பிரித்திவிராஜ் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். 13 வருடங்களாக ஒரு நேர்மையான அரசு அதிகாரி சந்திக்க வேண்டிய பிரச்சனைகள் மற்றும் அரசியல்வாதிகளால் பல்வேறு அழுத்தங்களை சந்தித்துள்ளதாகவும், விஏஓ பணியில் மாற்றத்தை தன்னால் கொண்டு வர முடியவில்லை எனவு​ம் கூறி, விரக்தியில் அவர் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com